Sunday, November 22, 2009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முரட்டுக்காளை கார்த் சாகசம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். நெடு நாட்களாக வனவாசம் சென்றிருந்த நான் இப்போது தான் திரும்பி வந்து உள்ளேன். தடங்கலுக்கு மன்னிக்கவும் என்று அந்த காலத்தில் தொலைக்கட்சியில் சொல்வது போலத்தான் நானும் சொல்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் தொடர்ந்து பதிவிட முயல்கிறேன். இனி பதிவுக்கு செல்வோமா?

கதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர். பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.

கதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும்? பூமியை காப்பாற்றுவது யார்? கார்த் கதி என்ன? பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.

இனிமேல் என்ன நடக்கும்?

கார்த் கதி என்ன?

கார்த் பிழைப்பானா?

அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?

பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?

அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

 

0
01
02
03
04
05
06
07
08
09
10
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26

கதையை படித்து மகிழ்ந்த நண்பர்களே,உங்கள் கருத்துக்களை பதிந்தால் சந்தோசப் படுவேன்.

Friday, July 31, 2009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முன்னோட்டம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இதோ என்னுடைய அடுத்த முன்னோட்ட பதிவு ரெடி. இந்த முறை சற்று வித்தியாசமாக கதையையும் டீசர் போல அளித்து இருக்கிறேன். எப்படி என்பதை உங்களின் கருத்துக்கள் மூலமே அறிய வேண்டும்.

நம்முடைய அடுத்த காமிக்ஸ் பதிவின் ஹீரோ சற்று வித்தியாசமானவர். இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது, இந்த ஹீரோவின் ஆரம்ப கால கதைகளுக்கு தான். பின்னாளில் வந்த மொக்கை ராணி காமிக்ஸ் கதைகளுக்கோ அல்லது நாம் பதிவ்டப் போகும் சற்று சுமாரான இந்திரஜால் கதைகளுக்கோ ரசிகர்கள் குறைவுதான்.

உதாரணமாக ஆரம்ப கால புளுபெர்ரி (கேப்டன் டைகர்) கதைகள் அருமையாக இருக்கும். தற்போது வந்து கொண்டு இருக்கும் கதைகள் அமெரிக்க பாணி மொக்கை கதைகளே. அதனால் இந்த ஹீரோவின் ஆரம்ப கால (பிராங்க் பெல்லாமி ஓவியத்தில்) வந்த கதைகள் கிடைத்தால் மறக்காமல் படியுங்கள். அருமையாக இருக்கும். இதோ கதையின் முன்னோட்டம்:

கதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் (நம்முடைய சாத்தான் அல்ல) அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர்.

Teaser 1

பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.

Teaser 2

கதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும்? பூமியை காப்பாற்றுவது யார்? கார்த் கதி என்ன?

Teaser 3

பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.

Teaser 4

இனிமேல் என்ன நடக்கும்?

கார்த் கதி என்ன?

கார்த் பிழைப்பானா?

அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?

பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?

அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண நம்முடைய அடுத்த பதிவை பாருங்கள். இப்போது பல்சுவை பகுதியாக சில பல ஒரு பக்க / இரு பக்க கதைகளும், பக்க நிரப்பிகளும் உங்களின் பார்வைக்கு.

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 1

birbal 1

நட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 2

birbal 2

ரங்கு - ஒரு பக்க கதை - ஓவியர் ஸெஹாப் கைவண்ணத்தில்-அற்புத ஓவியரின் கைவண்ணம்

rangu

ஒரு பக்க நிரப்பி - ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்

67 Ripley

ஒரு பக்க நிரப்பி - சொல்வதற்கு ஒன்றுமில்லை - ஹீத் கிளிப்

67 sa

ஒரு பக்க நிரப்பி - மணியன் - ஹென்றி

67 henri

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவை ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே (அதாவது கதையை பற்றிய டீசர் உடன்) இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

Tuesday, June 16, 2009

வைரத்தின் நிழல் -முகமூடி வேதாளர் -தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.சென்ற பதிவிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. நானே இதனை எதிர் பார்க்கவில்லை.

தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த பதிவை சென்ற வாரமே இட இயலவில்லை. அடுக்கு மொழியில் அறிஞர் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் அகில உலக அ.கொ.தீ.க. தலைவரான பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களின் பதின்ம வயது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவருக்கு இந்த பதிவை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன்.

கடந்த ஒரு வார காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு - என் பார்வையில்:

இதுவரையில் வெறும் மீள் பதிவுகளை மட்டுமே கண்டு வந்த தமிழ் காமிக் தளத்திற்கு விடிவு காலம் வந்து விட்டது போல. மதுரையை சேர்ந்த ஜாலி ஜம்ப்பர் என்ற பழைய பதிவர் மறுபடியும் வந்து இந்த வலைப் பூவுக்கு மறு வாழ்வு தந்து உள்ளார். பத்து பேர் பதிவர்களாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூங்கி கொண்டு இருந்த இந்த தளத்தை தட்டி எழுப்ப வந்துள்ளார் ஜாலி ஜம்ப்பர். முதலில் ஒரு டீசர் பதிவாக, அதுவும் சிறந்த டீசர் ஆக வருகை தந்து உள்ளார்.

சென்னையை சேர்ந்த லக்கி லிமட்டும் இந்த தளத்தில் இப்போது சேர்ந்து உள்ளார். அதனால் விரைவில் நல்லவை நடக்கும் என்று நம்புகிறேன். நண்பர் லக்கி லிமட் தன்னுடைய புல் செட் வல்கன்'ஐ ஒவ்வொன்றாக களமிறக்குகிறார். அதிலும் இந்த பதிவிற்காக சிரமப் பட்டு இருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இந்த சிறு வயதில் இப்படி அட்டகாசமாக செயல்படும் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நண்பர் கனவுகளின் காதலன் மீள் தூக்கத்தில் இருந்து விடுபட்டவரை போல அடுத்தடுத்து இரண்டு அதிரடி படங்களை பற்றிய விமர்சனத்துடன் களம் இறங்கியுள்ளார். இந்த புதிய விமரிசனங்கள் தொடரும் என்றே நம்புகிறது வலையுலகம். மேலும் சில பதிவர்கள் இதனைப் போலவே மாறுவதற்கும் வாய்புள்ளது.

எங்குமே கிடைக்காத ஒரு அரிய பதிவை இட்டு உள்ளார் நண்பர் காமிக்ஸ் பிரியர். அவருக்கு நம் வாழ்த்துக்கள். அவர் தொடருவார் என்பதை அவருடைய புதிய பன்ச் லைன் சொல்கிறது.

பதிவுலகிற்கு ஒரு புதிய திருப்பமாக ஒலக காமிக்ஸ் ரசிகன் திரும்பி வந்துள்ளார். அவருடைய கமெண்டுகளின் மூலமே தமிழ் காமிக்ஸ் மேல் உள்ள அவருடைய ஆழ்ந்த புரிதலை உணரலாம். திரும்ப வந்தமைக்கு நன்றி நண்பரே.

அற்புதமான கிசு கிசுக்களை அள்ளி வழங்கியுருக்கிறார்கள் பூங்காவனமும் கிசு கிசு கோபாலும். ஏஜண்ட் காத்தவ் யாரோ ஒரு மிர்சாவுடன் தன்னுடைய துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார்.ஆனால் என்னைப் பற்றி எதுவும் இல்லை என்பது நல்ல விஷயமா இல்லையா என்பது தெரியவில்லை

இனிமேல் கதையை படித்து என்சாய் செய்யுங்கள்.

 

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை

00

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 1

01

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 2

02

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 3

03

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 4

04

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 5

05

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 6

06

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 7

07

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 8

08

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 9

09

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 10

10

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 11

11

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 12

12

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 13

13

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 14

14

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 15

15

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 16

16

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 17

17

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 18

18

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்: 19

19

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - முகமூடி வேதாளர் - வைரத்தின் நிழல் - முழு நீளக்கதை - பக்கம்:20

20

கதையை படித்து மகிழ்ந்த நண்பர்களே,உங்கள் கருத்துக்களை பதிந்தால் சந்தோசப் படுவேன். இந்த கதையில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்து உங்களுக்கு வழங்குகிறேன்.

இப்போது கதை நடக்கும் தளம் சென்னை.

வேதாளர் = விஜய டி.ராஜேந்தர்

டன்கேல வைரம் = மகன் சிம்பு

கோபத்தில் வீட்டில் விட்டு வந்து விட்ட மகன் சிம்புவை தேடி சென்னைக்கு வருகிறார் வேதாளர் விஜய டி.ராஜேந்தர். இதற்க்கு மேல் நீங்கள் எழுதுவது தான் கதை.

 

கனவுகளின் காதலர் அவர்களுக்கும், பயங்கரவாதி டாக்டர் செவனுக்கும், லக்கி லிமட்டுக்கும் சிறப்பு அழைப்பு. கண்டிப்பாக நீங்கள் இந்த ஆட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்டங்களில் விஜய டி.ராஜேந்தர் என்ன கூறி இருப்பார் என்பதை கமெண்ட் ஆக இடுங்களேன்?

11 A

அதற்காக மற்றவர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்பது இல்லை. ஒலக காமிக்ஸ் ரசிகன், விஸ்வா, அய்யம்பாளையம் Sir என்று பலரும் வந்து தங்களின் கருத்துக்களை கூறி செல்ல வேண்டும். செய்வீர்களா?

17 a

பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

புலா சுலாகி,

கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

பதிவிற்கு பின்னர் செய்யப் படும் / வலையேற்றப் படும் மாற்றங்கள்:

நண்பர் லக்கி லிமட் உடனடியாக களப் பணியில் இறங்கி விட்டார். அதனால் இதோ அவர் தயாரிப்பில் வந்த முதல் பக்கம்:

14 lmat

லக்கி லிமட் அவர்களின் கை வண்ணத்தில் இரண்டாவது பக்க மொழி பெயர்ப்பு:

17 limat

நண்பர் கனவுகளின் காதலன் அவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்து விட்டார். இதோ அவரின் கை வண்ணம்:

11 A_thumb

Related Posts Widget for Blogs by LinkWithin